கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரைலர் ரிலீஸ்
நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம்-2 திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நடித்து வெளிவந்த படம் விஸ்வரூபம். கமலுடன் ஆன்ட்ரியா, பூஜா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பல்வேறு தடைகளை தாண்டி இந்த படம் வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, விஸ்வரூபம்-2 வெளியிட முடிவு செய்யப்பட்டது.
இதற்கான, பணிகள், படப்பிடிப்புகள் தொடங்கி முடிவடைந்தும், விஸ்வரூபம்-2 வெளியாவதில் தொடர்ந்து பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், விஸ்வரூபம்-2 படத்தின் டிரைலர் வரும் 11ம் தேதி வெளியிடப்படும என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், விஸ்வரூபம் 2 தமிழ் டிரைலரை ஸ்ருதிஹாசன் கடந்த சில நிமிடங்களுக்கு முன்பு வெளியிட்டார். இதை தொடர்ந்து, இந்தி டிரைலரை ஆமீர்கானும், தெலுங்கு டிரைலரை ஜூனியர் என்.டி.ஆரும் வெளியிட்டனர்.
விஸ்வரூபம் முதல் பாகம் வெளியான ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு விஸ்வரூபம்-2 திரைப்படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரைலர் இதோ..