மதம்பிடித்து ஆக்ரோஷமாக ஓடிய யானைகள்... கேளரளாவில் பரபரப்பு
குருவாயூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற கிருஷ்ணர் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையின்போது மதம்பிடித்து தறிகெட்டு ஓடிய 3 யானைகளால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலம் குருவாயூர் கிருஷ்ணர் கோயிலுக்குள் அலங்கரிக்கப்பட்ட யானைகள் அணிவகுத்து நின்றன. அவற்றில் ஒரு யானை மீது கிருஷ்ணர் சிலை வைக்கப்பட்டு பூஜைக்கு எடுத்து செல்ல தயார் செய்யப்பட்டது.
அப்போது, அங்கு நின்றிருந்த ஒரு யானைக்கு மதம் பிடித்து பக்தர்கள் கூட்டத்திற்குள் ஆக்ரோஷமாக புகுந்தது.
தொடர்ந்த 2 யானைகளுக்கு மதம் பிடித்தது. 3 யானைகளும் ஒவ்வொரு திசைக்கு தெறித்து ஓடியதால் குருவாயூர் கோயிலில் பரபரப்பு நிலவியது.
பீதியடைந்த பக்தர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடினர். இந்த சம்பவத்தில் யானை பாகன் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறிது நேரம் பரபரப்புக்கு பின், 3 யானைகளும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.