ஆன்லைனில் உங்கள் தகவல்கள் திருடப்படுகிறதா? வருகிறது சட்டம்!

ஃபேஸ்புக், கூகுள், அமேசான் போன்ற டெக் நிறுவனங்கள் அதனை பயன்படுத்தும் பயனாளர்களிடம் இருந்து கண் இமைக்கும் நொடியில் பல தனிப்பட்ட தகவல்களை பெற்றுவிடுகின்றன.

இப்படி தகவல் பெறுவதை முறைப்படுத்த இந்தியாவில் இதுவரை முறையான சட்டம் இல்லாத நிலையில், முதன் முறையாக ஒரு மசோதா சீக்கிரமே நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ளது.

அந்த மசோதா, சட்டமாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். இந்த மசோதாவைத் தயாரிக்கும் பணியை முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியான பி.என்.ஸ்ரீகிருஷ்ணாவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அவர் இதற்காக 10 பேர் குழுவுடன் இணைந்து பல நாட்கள் வேலை செய்து, மசோதாவின் கடைசி திருத்தும் பணிகளை செய்து வருகிறார்.

இதுகுறித்து பி.என்.ஸ்ரீகிருஷ்ணா, `இந்தியா ஒரு சிலிகான்-சிப் பொருளாதாரமாக மாறி வருகிறது. ஆனால், பிரைவசி குறித்து டேட்டா முறைப்படுத்துதல் குறித்தும் நமக்கு தெளிவு இல்லை. அது சார்ந்த சட்டங்களும் மிகவும் பின்தங்கியுள்ளது.

சர்க்கரை அளவையும் ரத்தக் கொதிப்பையும் நாம் எப்படி கட்டுக்குள் வைத்திருக்கிறோமோ, அதேபோல டேட்டாவையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய அவசியம் நமக்கு உள்ளது. புதிதாக வரப் போகும் மசோதா குறித்து அமேசான், கூகுள், மைக்ரோசாஃப்ட், ஃபிலிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் கண்டிப்பாக அச்சத்தில் தான் இருக்கிறது' என்று கூறியுள்ளார்.

More News >>