அலுவலக நட்பும் அவசியம் நண்பர்களே..!

நமது ஒரு நாள் மட்டுமல்ல வாழ்க்கையின் ஒரு அத்தியாயத்தியே நாம் நம் அலுவலகத்தில் தான் செலவழிப்போம்.

அந்த நேரத்தை மகிழ்ச்சியும் நிம்மதியும் குழையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். நமது அலுவலகக் குடும்பத்துடன் ஒன்றி இருக்கவும் நண்பர்களை நண்பர்களாகவே தொடர்ச் செய்வதற்கும் சில வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

அலுவலகத்தில் உங்களுக்கென தனி நட்பு வட்டம் இருந்தாலும் உடன் பணி செய்வோர் அனைவரிடமும் நல்ல நட்பு முறைய்யில் ஆன உறவு அவசியம். சுமூகமான, எளிதாக அணுகக்கூடியவராக உங்களை வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடன் இருப்போர் குறித்து அறிந்து கொள்ள முயற்சி எடுங்கள். அனைவரிடமும் சமமாக பழகுங்கள்.

உங்களுக்கும் உடன் பணியாற்றுவோரில் சிலருக்கும் இடையில் சில பிடித்தமான விஷயங்களில் ஒற்றுமை இருக்கும். அதை அறிந்துகொண்டு நட்பு பாராட்டுவது கூடுதல் பலமாக அமையும்.

அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் அடுத்தவர் பற்றி புரளியும் புரணியும் பேசுவதை தவிர்க்கவும். எப்போதும் உங்களுக்கும் உங்களைச் சுற்றி இருப்போருக்கும் ஒரு பாஸிட்டிவான அலைகளைக் கொடுங்கள்.

உங்கள் உடன் இருக்கும் நண்பர்கள் உங்கள் மூலமாக சலிப்பு அடையக் கூடாது. ஆர்வமிக்க சந்திப்புகள், பேச்சுகள், உரைகள் என ஆராவராமக உங்கள் வட்டததை மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள்

More News >>