புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்துகிறது போர்ஷ்!

ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்று ஜெர்மன் கார் தயாரிப்பாளரான போர்ஷ்.

அட்டகாசமான டிசைன், சக்தி வாய்ந்த இன்ஜின், மிரட்டலான பெர்ஃபார்மன்ஸ், தெறிக்கவிடும் வேகம் போன்ற அம்சங்களால் புகழ்பெற்றது போர்ஷ் நிறுவனங்களின் கார்கள். அப்படி புகழ் பெற்ற கார்கள் அனைத்தும் பெட்ரோல் அல்லது டீசல் கொண்டு ஓடக்கூடியவை.

இந்நிலையில், புதிய முன்னெடுப்பாக போர்ஷ் நிறுவனம், எலக்ட்ரிக் கார்களை வெளியிடப் போவதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது. தற்போது, தனது எலக்ட்ரிக் காரின் பெயரை அறவித்துள்ளது போர்ஷ்.

2019 ஆம் ஆண்டு சர்வதேச சந்தையில் கிடைக்கப் போகும் போர்ஷ் எலக்ட்ரிக் காரின் பெயர், டெய்கன் (Taycan). இதன் அர்த்தம், துடிப்பான இளம் குதிரை என்பதாகும். போர்ஷ் நிறுவனத்தின் ட்ரேட்மார்க் சிம்பிளை குறிக்கும் வகையில் இந்த பெயர் சூட்டப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. போர்ஷ் தனது அதகளமான எலக்ட்ரிக் கார் தயாரிப்புத் திட்டத்துக்கு, மிஷன் ஈ என பெயரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

200 கிலோ மீட்டர் வேகத்தை 12 நொடிகளில் தொடும் ஆற்றல் கொண்டது டெய்கன். 2020 ஆம் ஆண்டு இந்த கார் இந்தியாவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News >>