எம்ஜிஆர் நூற்றாண்டு விழா முன்னிட்டு கூடுதலாக 68 கைதிகள் விடுதலை

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையட்டி கூடுதலாக 68 ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையட்டி, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளில் முதல்கட்டமாக 67 கைதிகளை கடந்த 6ம் தேதி விடுவிப்பதாக அறிவித்தது. அதன்படி, புழல் சிறைச்சாலையில் 10 ஆண்டுகளாக தண்டனை காலம் நிறைவு பெற்ற 67 ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையட்டி கூடுதலாக 68 கைதிகளை விடுதலை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, புழல் மத்திய சிறையில் 44 ஆண்டுகள் மற்றும் 8 பெண்கள் என மொத்தம் 52 பேரும், இதர சிறைச்சாலைகளில் இருந்து 16 பேரும் என மொத்தம் 68 கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது.

More News >>