தங்க துகள்களால் அலங்கரிக்கப்பட்ட சிக்கன் வறுவல்!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தங்கத்துகள்களால் அலங்கரிக்கப்பட்ட, சிக்கன் வறுவல் (கோல்ட் சிக்கன் ஃப்ரை) மிகவும் பிரபலமாகி வருகிறது.
நியூயார்க்கில் உள்ள மேன்ஹாட்டனில், பிரையன் மாசா என்பவருக்கு சொந்தமான, உணவகத்தில், தங்க துகள் சிக்கன் தயாரிக்கப்படுகிறன.
அங்கு, தங்க துகள்களால் அலங்கரிக்கப்பட்ட பத்து சிக்கன் துண்டுகள் மூவாயிரம் ரூபாய்யாகவும் (45 டாலர்கள்), 20 துண்டுகள் 6 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
இது குறித்து உணவகத்தின் உரிமையாளர் கூறுகையில், “தங்கத்தின் மீதுள்ள மோகம், அதிகரித்து வருவதால் இது போன்ற ஓர் உணவை தயாரித்து விற்பனை செய்வதாக” தெரிவித்துள்ளார்.
இந்த கோல்ட் சிக்கன் ஃப்ரையை உணவு பிரியர்கள் ஆர்வத்துடன் சாப்பிடுகின்றனர்.... எப்படியெல்லாம் யோசிக்கறாங்க!