மத்திய நிதிஉதவி தமிழகத்துக்குக் கிடைக்கும்- முதல்வர் அறிக்கை!
தமிழ்நாட்டில் சாலை போடுவதற்கென்று மத்திய அரசு, 75,000 கோடி ரூபாயை ஒதுக்க உள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சட்டமன்றத்தில் பேசியதாவது, `தமிழகத்தில் ஏராளமான சாலை போடும் திட்டத்தை வகுத்துள்ளோம். இதற்கென்று பிரத்யேகமாக நிதி ஒதுக்குமாறு மத்திய அரசை கேட்டுள்ளோம்.
2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 3029.65 ஹெக்டர் நிலம் சென்னை - சேலம் இடையிலான சாலை போடும் திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், சென்னை - பெங்களூரு இடையிலான சாலை போடுவதற்கு நிலங்கள் கையகப்படுத்தும் நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது.
அந்த வேலைகளும் சீக்கிரமே முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அதிவேக சாலை திட்டத்துக்கு மட்டும் 20,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது' என்று கூறியுள்ளார்.