பெண் எம்.பியை கிண்டல் செய்த 3 வாலிபர்கள் கைது

உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க-வின் கூட்டணி கட்சி எம்.பியான அனுபிரியா பட்டேல் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சொந்த தொகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். தனது சுற்று பயணத்தை முடித்து கொண்டு இரவு தனது காரில் வாரணாசிக்கு திருப்பி கொண்டிருந்தார்.  அப்போது மத்திய அமைச்சரின் காரை இரவில் 3 வாலிபர்கள் பின் தொடர்ந்து வருவதை கண்டனர். நம்பர் இல்லாத அந்த கார் திடீரென எம்.பி-யின் காரை முந்தி சென்று வழி மறித்து நின்றது. அப்போது எம்.பியின் பாதுகாப்பு போலீசார் அவர்களை எச்சரித்தனர்.   அதனை சிறிதும் பொருட்படுத்தாத அந்த வாலிபர்கள் அனுபிரியா எம்.பியை தகாத வார்த்தைகளை கொண்டு பேசியும், கேலியும் கிண்டலும் செய்து அவரை அவமதித்தனர். தொடர்ந்து பாதுகாப்பு போலீசார் எச்சரிக்கை செய்ததன் காரணமாக வாலிபர்கள் சென்றனர்.   சற்று பெருமூச்சை விட்ட எம்.பி.க்கு அது நிலைக்கவில்லை. சிறிது நேரத்தில் மீண்டும் வந்து அமைச்சர் அனுப்பிரியவை கிண்டல் செய்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பாதுகாவலர்கள் அருகில் உள்ள வாரணாசி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அந்த 3 வாலிபர்களை பிடிப்பதற்காக சாலையில் தடுப்பு ஏற்படுத்தி மடக்கி பிடிக்க தயாரானார்கள் வாரணாசி போலீசார்.    அந்த வழியே வந்த அந்த குறிப்பிட்ட நம்பர் இல்லாத காரை வழி மறித்து மடக்கி பிடித்தனர் போலீசார். அவர்கள் யார் என்ற விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
More News >>