ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கான அனுமதியை ரத்து செய்தது வாரியம்
ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்வதற்காக ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதியை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் திரும்ப பெற்றுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த மே மாதம் 22ம் தேதி மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இதில், போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைதொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. பின்னர், ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு கடந்த 2016ம் ஆண்டு வழங்கிய அனுமதியை திரும்பப் பெறுவதாக தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இன்று அறிவித்தது.