சிபிஎஸ்இயின் கீழ் இனி நீட் தேர்வு நடைபெறாது: மத்திய அரசு தகவல்

நீட் தேர்வுகளை இனி சிபிஎஸ்இ நடத்தாது என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த 2016ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. இந்த நீட் தேர்வை சிபிஎஸ்இ நடத்தி வந்தது. தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் நீட் தேர்வு நடைபெற்றது. நடப்பு ஆண்டிற்கான நீட் தேர்வு முடிவில் தமிழகத்தில் மட்டும் 36 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

இந்நிலையில், நீட் தேர்வை இனி சிபிஎஸ்இ நடத்தாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. தேசிய தேர்வு முகமைதான் இனி நீட் தேர்வை நடத்தும் என்றும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்டை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

More News >>