ஐ-போனின் ஒரு புதிய அப்டேட்!- சிறப்புப் பார்வை
ஸ்மார்ட்போன் உலகில் எப்போதும் டாப் இடத்தில் நிலைத்து நிற்கும் ஒரே மாடலாக உள்ளது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் மாடல்.
முதன் முதலாக வெளிவந்த ஐபோனுக்கும் தற்போது வரும் ஐபோனுக்கும் ஒரு மலையளவு வித்தியாசங்கள் உள்ளன. இதற்குக் காரணம், ஆப்பிள் தனது அப்டேட்களில் செலுத்தி வரும் அதிக கவனம் தான். இந்த ஆண்டு மட்டும் ஆப்பிள் மூன்று வகை ஐபோனை வெளியிட உள்ளது. இந்த ஐபோனின் டிசைன் புகைப்படங்கள் தற்போது `ஃபோர்ப்ஸ்' இதழில் லீக் ஆகியுள்ளது.
இதை வைத்து அடுத்த வரப் போகும் ஐபோன் எக்ஸ் ப்ளஸ் போனில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும் என்று யூகிக்க முடியும். இதில் 6.1 இன்ச்சுடன் சாதாரண டிஸ்ப்ளே கொண்ட பட்ஜெட் வெர்ஷன் ஒன்று. இதற்கடுத்து ஓலெட் டிஸ்ப்ளேவுடன் வரப் போகும் மிடில் வெர்ஷன். கடைசியாக வரும் ஆடம்பர போன், 6.5 இன்ச் கொண்ட டிஸ்ப்ளே கொண்டதாகவும் 3டி டச் டிஸ்ப்ளே, ஓலெட் வசதி கொண்டதாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் ப்ரீமியம் வகை போனில் தான் ஒரு குறிப்பிடத்தகுந்த வகையிலான மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போனின் பின்புறத்தில் 3 கேமராக இருக்கும் என்று டிசைன் லீக் வைத்து யூகிக்க முடிகிறது. இந்த மூன்று கேமராக்களும் செங்குத்தான நிலையில் பொருத்தப்பட்டு உள்ளது. இதனால், மிகச் சிறந்த போட்டோக்கள் எடுக்க முடியும் என்று தெரிகிறது.