ஏசி அறையில் வாழ்க்கையா..? நோயோடு வாழத் தயாராகுங்கள்!

ஏசி என்பது ஆடம்பரத்தின் ஒரு குறியீடாக மாறியுள்ள காலத்தில் வாழ்கிறோம்.

ஓட்டல், அலுவலகம், சினிமா தியேட்டர் என எங்கு சென்றாலும் ஏசி இல்லாமல் இருக்காது என்ற நிலை உருவாகிவிட்டது. ஏசி வாங்கும் அளவுக்கு பணம் இருந்தால், எதைப் பற்றியும் யோசிக்காமல் வாங்கிவிடும் மனோபாவம் உயர்ந்து வருகிறது.

ஆனால், ஏசி பயன்படுத்துவதால் வரும் பக்கவிளைவுகளையும் தெரிந்து கொண்டு பயன்படுத்துவது உடலுக்கும் வாழ்க்கைக்கும் நன்மை பயக்கும். நீர்சத்து குறைபாடு ஏசி-யில் வெகு நேரம் அமர்ந்திருந்தால் உடலில் நீர்சத்து குறைபாடு ஏற்படும். இது எதனால் என்றால், ஏசி அறையில் இருக்கும் அனைத்து ஈரபதத்தையும் உறிஞ்சிவிட்டு, காற்றை வறண்டதாக மாற்றிவிடும்.

அறையும் மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால், நீர் குடிக்கவே தோன்றாது. இதனால், உடல் நீர்சத்தை இழந்துவிடும். தலைவலி ஏசியில் நீண்ட நேரம் இருந்தால் தலை வலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும் ஏசியை சரியாக பராமரிக்காமல் இருந்தால் அலர்ஜி வர வாய்ப்புள்ளது.

நீர்சத்து குறைபாடும் தலை வலிக்கு வழிவகுக்கும். ஆம், நீர்சத்து குறைபாடும் தலை வலி வருவதற்கான ஒரு காரணம் என்பதை நாம் உணருவதில்லை. வறண்ட தோல் ஏசியில் அதிக நேரம் இருந்தால் வரும் பாதிப்புகளில் ஒன்று வறட்சியான தோல். ஈரபதம் அனைத்தையும் ஏசி உறிஞ்சிவிடுவதால் உங்கள் சருமத்தையும் அது விட்டு வைக்காது. இதனால் மிகவும் சோர்வான, வறட்சியான வரி வரியான தோல் அமைந்துவிடும்.

More News >>