வருமான வரி தாக்கல் செய்ய இறுதிநாள்!

இந்த ஆண்டுக்கான வருமான வரியின் முதற்கட்ட தவணையை செலுத்த இன்னும் மூன்று நாள்களே கால அவகாசம் உள்ளது.

இந்த நிதி ஆண்டுக்கான வருமான வரி செலுத்தும் நிலையில் உள்ளவரோ, ஊதியம் பெறும் பணியாளரோ, வரிப்பிடித்தம் 10ஆயிரம் அல்லது அதற்கு மேலானதாக இருப்பின் முன் தவணை செலுத்தலாம்.

மூத்த குடிமக்கள் அதாவது 60 வயதுக்கு மேற்பட்டோர் தங்களுக்கென வருமானம் ஏதும் இல்லையென்றால் வரி செலுத்துவதில் இருந்து விலக்கப்படுவார்கள்.

சட்ட விதி எண் 44ஏடி அடிப்ப்டையிலான வருமான வரி செலுத்தும் அவசியம் உள்ள தொழில் செய்வோர் வருமான வரியாக செலுத்த வேண்டிய மொத்தத் தொகையையும் ஜூன் 15-ம் தேதிக்கு முன்னரே மொத்தமாக செலுத்திவிட வேண்டும்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் அனைத்தும் இ- பேமண்ட் முறையில் மட்டுமே பணம் செலுத்த வேண்டும். மேலும் வருமான வரிச் சட்டம் 44ஏபி-யின் கீழ் கணக்கிடப்படும் வருமான வரித்தொகையை செலுத்துவோரும் இ- பேமன்ட் முறையிலேயே வரி செலுத்த வேண்டும்.

 

More News >>