நியூயார்க்கில்nbspகுண்டு வெடிப்பு...

நியூயார்க் நகரின் சுரங்கப்பாதை ஒன்றில் பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்ததில் பலர் காயம் அடைந்தனர்.

அங்குள்ள மேன்ஹாட்டன் பேருந்து நிலையத்தில் குண்டுவெடித்தது. சத்தத்தை கேட்டதும் பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். உயிர்சேதம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நியூயார்க் மாகாண போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரிடம் நியூயார்க் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

More News >>