பிட்னஸ் வீடியோ வெளியிட்ட மோடி!
பிரதமர் மோடி தன்னுடைய உடற்பயிற்சி வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கடந்த சில நாள்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தன்னுடைய உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டார். இதே சவாலை பிரதமர் மோடியும் ஏற்றுக்கொள்ளுமாறு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை வைத்திருந்தார்.
இதையடுத்து உடனடியாக ட்விட்டரில் “விராட் கோலியின் சவாலை ஏற்கிறேன். விரைவில் என்னுடைய பிட்னஸ் வீடியோவை வெளியிடுகிறேன்” எனக் கூறியிருந்தார். இதையடுத்து இந்நிலையில் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தனது காலை நேர உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டு உள்ளார்.
மேலும், தன் ட்விட்டர் பதிவில், “இதுதான் என்னுடைய உடற்பயிற்சி முறைகள் ஆகும். நடைபயிற்சி, மற்றும் யோகாவைத் தவிர்த்து பஞ்சதத்வாஸ் நடைபயிற்சி முறையையும் பின்பற்றுகிறேன்” என்றும் கூறியுள்ளார்.