எஸ்.வி.சேகரை கைது செய்ய தமிழக அரசு தயங்குகிறது- ஸ்டாலின் தாக்கு
'எஸ்.வி.சேகரை கைது செய்ய தமிழக அரசு தயங்குகிறது’ என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தாக்கியுள்ளார்.
எஸ். வி. சேகர் விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் இருந்து இன்று திமுக வெளிநடப்பு செய்தது. மேலும், எஸ். வி. சேகர் விவகாரம் குறித்து விவாதிக்க சபாநாயகர் சட்டசபையில் மறுப்பு தெரிவித்ததால் திமுக வெளிநடப்பு செய்தது.
மேலும், ஸ்டாலின் கூறுகையில், ”எஸ். வி. சேகரை கைது செய்ய அதிமுக அரசு தயங்குகிறது. சுதந்திரமாக அவரை வெளியே விட்டுள்ளனர். நீதிமன்றம் கைது செய்ய உத்தரவிட்டும் போலீஸ் துணையுடன் எஸ்.வி.சேகர் நடமாடுகிறார்” என ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில், சபாநாயகர் தனபால் கூறுகையில், “எஸ். வி. சேகர் விவகாரத்தில் 20 ஆம் தேதி வரை பொறுத்திருப்போம்” எனக் கூறியுள்ளார்.