ஐயா நான் வெளிநாடுலாம் போகலிங்க: மனுவை வாபஸ் பெற்ற பிரபல நடிகர்
By Isaivaani
கடந்த ஆண்டு இறுதியில் பிரபல நடிகை ஒருவர் கடத்தல் தொடர்பான விவகாரத்தில் நடிகர் திலீப் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இரண்டரை மாதம் சிறையில் இருந்த திலீப் நிபந்தனைகளுடன் ஜாமினில் வெளியே வந்தார்.
அது மட்டுமில்லாமல் நீதிமன்ற ஒப்புதலுடன் அவ்வப்போது தான் ஏற்கனவே ஒப்பந்தமாகியுள்ள திரைப்படங்களில் நடித்து வந்தார். இதனிடையே கடந்த மாதம் நீதிமன்றத்தில் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்தார் திலீப். அதில் தான் அடுத்து நடிக்கவிருக்கும் புதிய திரைப்படம் ஒன்றில் நடிப்பதற்காக வெளிநாடு செல்ல அனுமதியளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். அதற்கு சில நிபந்தனைகளை தளர்த்தி உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
பிரபல ஒளிப்பதிவாளர் ராமச்சந்திர பாபு இயக்கவுள்ள புதிய திரைப்படத்தில் நடிகர் திலீப் ஒப்பந்தம் ஆகியுள்ளார். மாயாஜால கலைஞராக நடிகர் திலீப் நடிக்கவுள்ளார். ப்ரோபசர் டிங்கண் என பெயர் சூடப்பட்ட படத்தை 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு அவர் தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போதே திடீரென நேற்று மனுவினை வாபஸ் வாங்கினார். தற்போது ஒப்பந்தம் செய்துள்ள புதிய திரைப்படம் ப்ரொபசர் டின்கண் திரைப்படம் துவங்குவதில் தாமதம் ஏற்படுவதால் இந்த முடிவை எடுத்துள்ளார் நடிகர் திலீப்.