வைரலாகும் விஜய் சேதுபதியின் ஜூங்கா பட டிரைலர்
விஜய் சேதுபதி நடிப்பில் விரைவில் திரையரங்குகளில் வர இருக்கும் ஜூங்கா படத்தின் மிரட்டலான டிரைலர் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய இயக்குனர் கோகுல் மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் விரைவில் வெளிவர இருக்கும் திரைப்படம் ஜூங்கா. இந்த படம் விஜய் சேதுபதி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஜூங்கா படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக வனமகன் படத்தில் நடித்த சயீஷா நடித்துள்ளார். இரண்டாவது ஹீரோயினாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார். சித்தார்த் விபின இசையமைத்துள்ளார். பாரிஸில் தானாக வசிக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.
இந்த படத்தின் டிரைலர் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த படத்தில், விஜய் சேதுபதி அதிரடி வசனங்களை பேசி ரசிகர்களை ஈர்த்துள்ளார். இந்த டிரைலர் இணையதளங்களில் வைரலாகி பரவி வருவதை அடுத்து, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஜூங்கா படத்தின் ட்ரைலர் இதோ..