மணமணக்கும் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி

ரசம் வகைகளிலே நாம் இன்று பார்க்க போவது தேங்காய் பாலில் செய்யக்கூடிய ருசியான ரசம் வகை. தேங்காய் பால் கொண்டு ரசம் செய்வது எப்படி என்று பார்ப்போமா..

தேவையான பொருட்கள்:

முதல் தேங்காய்ப்பால் - 1 கப், இரண்டாம் தேங்காய்ப்பால் - 1/2 கப், உப்பு - தேவைக்கு, புளிக்கரைசல் - 1/2 கப், மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், துவரம்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 1 டீஸ்பூன்,

அலங்கரிக்க:

நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்.

தாளிக்க:

எண்ணெய், கடுகு, பெருங்காயம் - தலா 1 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 3, கறிவேப்பிலை - 1 கொத்து.

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பை வறுத்து, நைசாக கெட்டியாக அரைத்து கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் இரண்டாம் பால், அரைத்த விழுது சேர்த்துக் கொதிக்க விட்டு, புளிக்கரைசல், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மேலும் இரண்டு கொதி விடவும்.

இப்பொழுது முதல் தேங்காய்ப்பால் ஊற்றி, நுரை தட்டியதும் கடாயில் தாளிக்க கொடுத்த பொருட்களைத் தாளித்து கொட்டி இறக்கவும். கொத்தமல்லித்தழையை தூவி சூடாக சாதத்துடன் பரிமாறவும்.

More News >>