காதலி அனுஷ்கா சர்மாவை மணந்தார் விராட் கோலி-இத்தாலியில் நடந்தது

மிலன்: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் தனது காதலி அனுஷ்கா சர்மாவை நேற்று, இத்தாலியில் உள்ள ரிசார்ட்டில் மணம் முடித்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் கேப்டனுமான விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வந்தார். இருவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாக வளம் வந்தனர். இதனால், விராட் கோலியும் அனுஷ்கா சர்மாவும் காதலிப்பது உறுதியானது. இதனால், இவர்களது திருமணத்திற்கு ஏற்பாது செய்யப்பட்டது. ஆனால், திருமணம் எப்போது என்பதை இருவரும் மிக ரகசியமாக வைத்திருந்தனர். இதனால், ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது.இந்நிலையில், கடந்த 6ம் தேதி டெல்லியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியுடன் கோலிக்கு சுமார் 20 நாட்கள் வரை ஓய்வு பெற்றார். இந்த நேரத்தில் கோலிக்கும், அனுஷ்கா சர்மாவுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் பரவியது. இத்தாலியில் உள்ள மிலன் நகரில் வைத்து திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் அது தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டின் டஸ்கனி பிராந்தியத்தில் உள்ள புகழ்பெற்ற போர்கோ பினோசிட்டோ ரிசார்ட்டில் விராட் கோலி அனுஷ்கா சர்மாவின் திருமணம் நேற்று நடைபெற்றது. இந்த திருமணத்தில் இருவரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணம் முடிந்து இந்தியா திரும்பும் விராட்&அனுஷ்கா தம்பதி மும்பையில் விரைவில் ஆடம்பரமாக வரவேற்பு விழாவை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

More News >>