இன்போசிஸ்nbspநிறுவனnbspசெயல் துணை தலைவர் சங்கீதா சிங்nbspபதவி விலகினார்

இன்போசிஸ் நிறுவனத்தின் செயல் துணை தலைவர் பதவியிலிருந்து சங்கீதா சிங் விலகியுள்ளார். தகவல் தொழில்நுட்ப துறையில் முதுநிலை பெண் அதிகாரிகளுள் ஒருவரான சங்கீதா சிங், விப்ரோ நிறுவனத்திலிருந்து விலகி, இன்போசிஸ் நிறுவனத்தில் இணைந்தார்.   இன்போசிஸின் 750 மில்லியன் மதிப்புள்ள ஹெல்த்கேர் மற்றும் லைஃப் சயன்ஸ் வர்த்தக பிரிவினை சங்கீதா சிங் தலைமையேற்று நடத்தி வந்தார். இங்கு பணியில் சேர்ந்த இரண்டு ஆண்டு காலத்திற்குள் அவர் விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.   சங்கீதாவை தொடர்பு கொள்ள இயலாத நிலையில் செய்தியாளர்கள் இது குறித்து கேட்டபோது, இன்போசிஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். அவர் வேறொரு பன்னாட்டு பெருநிறுவனத்தில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More News >>