கேரளாவை அச்சுறுத்தும் வைரஸ்: நிபாவை தொடர்ந்து, டெங்கு, மலேரியா

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வந்த நிலையில் தற்போது டெங்கு மற்றும் மலேரியா வைரஸ் அம்மாநில மக்களை அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டு அம்மாநில மக்களை மரண பீதியடைய செய்தது. நிபா வைரஸ் மூலம் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தற்போது, நிபா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாக மாநில சுகாதார துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில், கேரளாவில் 14 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 180 பேருக்கு டெங்கு பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.இதைதவிர, கடந்த 1ம் தேதி முதல் 5 பேருக்கு மலேரியா பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

புதுக்காடி என்ற மலைபகுதியில் கோடை மழை பெய்யத் தொடங்கியதே டெங்கு பரவுவதற்கு காரணம் என கூறப்படுகிறது.

டெங்கு, மலேரியா மேலும் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

More News >>