மாணவர்களுக்கான மதிய உணவில் இனி.. சப்பாத்தி.. தயிர் சாதம்.. இனிப்பு..

புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு வகையில் இனி சப்பாத்தி, தயிர் சாதம், இனிப்பு வழங்கப்படும் என புதுவை முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுவையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், புதுவையை அடுத்த திருபுவனை சன்னியாசி குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் தொண்டு நிறுவனம் சார்பில் ரூ.32 லட்சம் செலவில் நவீன வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதனுடன், பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மாணவ மாணவிகளுக்கு தனித்தனி கழிப்பறைகள், விளையாட்டு உபகரணங்கள், ஓய்வு அறைகள், அனைத்து வகுப்பறைகளிலும் மின் விசிறிகள், தேசிய கொடிக்கு தன கொடி மேடை, விழா மேடை, புதிய கரும்பலைகளை என பள்ளி முழுவதும் புதிதாக புனரமைக்கப்பட்டு மாணவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

பள்ளியின் புதிய கட்டிட திறப்பு விழாவில் கலந்துக் கொண்ட புதுவை முதல்வர் நாராயண சாமி திறந்து வைத்து பேசியதாவது:

புதுவையில் அரசுப் பள்ளிகளும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக போட்டி போட்டு தரமான மாணவர்களை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சுவையான உணவு கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக, பெங்களூரில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, மதியம் வழங்கப்படும் வழக்கமான உணவுக்கு மாற்றாக சப்பாத்தி, தயிர் சாதம் மற்றும் சுவையுடன் கூடிய உணவும், இனிப்பு வகைகளும் வழங்கப்படும். இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வரும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

More News >>