அதிகரிக்கும் காற்று மாசுபாடு: டெல்லி மக்களுக்கு வெளியே வர தடை!

நாட்டின் தலைநகரான டெல்லியில் காற்று மாசுபாடு கடுமையான நிலைக்கு அதிகரித்துள்ளது.

அடுத்த சில நாள்களுக்கு மாசுபாடு அதிகரித்த நிலையில் நீடிக்க இருப்பதால் டெல்லியில் மக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், வெளியில் வருபவர்கள் முகத்துக்கு முகமூடி அணிந்து மட்டுமே வெளியில் வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

டெல்லியில் காற்று மாசுபாடை குறைத்து காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காக பல கட்ட முயற்சிகளை மாநகர நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக டெல்லியில் மாநகர பகுதிகளில் நடக்கும் கட்டுமான வேலைகள் அனைத்தையும் நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

”இன்று முழுவதும் தூசிப்புயல் எழும். இந்த நிலை வருகிற வெள்ளிக்கிழமை வரும் தொடரும்” என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

More News >>