கேரளாவில் வெளுத்துவாங்கும் தென்மேற்குப் பருவமழை!

தென்மேற்கு பருவமழையால் கேரள மாநில முழுவதும் கனத்த மழை பெய்து வருகிறது. மேலும், அடுத்த ஐந்து நாள்களுக்கு மழை தொடரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

கன மழையால் இதுவரையில் கேரள மாநிலத்தில் மட்டும் 27 பேர் பலியாகி உள்ளனர். குறிப்பாக இன்று மட்டும் ஒரு ஒன்பது வயது சிறுமி உள்பட நான்கு பேர் பலியாகி உள்ளனர். இன்றைய அதீத மழையால் தாமரசேரி பகுதியில் உள்ள கத்திபாரா கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவால் மாயமானவர்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

கேரளாவில் கோழிக்கோடு, ஆலப்புழா உள்ளிட்ட மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மல்லபுரம், வயநாடு பகுதிகளில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கனத்த மழையினால் ப்யிர்கள் நாசமாகி உள்ளன.

கோட்டயம், ஆலப்புழா, கோழிக்கோடி மற்றும் வயநாடு பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

More News >>