ஹெச்.டி.எஃப்.சி வங்கியில் அந்நிய முதலீடு செய்யலாம்!
உலக அளவில் வங்கித் துறையில் முன்னணியில் இருக்கும் ஹெச்.டி.எஃப்.சி-யின் அன்னிய நேரடி முதலீடுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளது மத்திய அமைச்சரவை.
இதன் மூலம் ஹெச்.டி.எஃப்.சி வங்கியில் 24,000 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீடு செய்யப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
வங்கிகளைப் பொறுத்தவரை அன்னிய நேரடி முதலீடு 74 சதவிகிதத்தைத் தாண்டக் கூடாது என்று இந்தியாவில் சட்டம் இருக்கிறது. இதன்படி ஹெச்.டி.எஃப்.சி வங்கிக்கு அந்நிய நேரடி முதலீடுபடி 10,000 ரூபாய் பெறலாம் என்று நிலை இருந்தது. இந்நிலையில், 24,000 கோடி ரூபாய்க்கு முதலீடு பெறும்படி ஒப்புதல் கொடுக்கப்பட்டு உள்ளது.
இப்படி அதிக நிதி முதலீடு செய்யப்படும் போதும், நிர்ணயிக்கப்பட்ட 74 சதவிகிதத்தை இந்த தொகை தாண்டாது என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து இடைக்கால மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல், 'இந்த கூடுதல் தொகையை கணக்கிட்டுக் கொண்டாலும், அந்நிய முதலீடின் பங்கு 74 சதவிகிதத்தைத் தாண்டாது' என்று கூறியுள்ளார்.