உலகக்கோப்பை கால்பந்து தொடர்: முதல் போட்டியில் ரஷ்யா வெற்றி

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நேற்று கோலாகல நிகழ்ச்சிகளுடன் ரஷ்யாவில் துவங்கியது. உலகின் மிக பெரிய ரசிகர்ப்பட்டாளத்தை கொண்ட கால்பந்து திருவிழாவை காண ரசிகர்கள் காத்திருந்த நேரத்திற்கு நேற்று விருந்தாக உற்சாக துவக்க விழா நடந்தேறியது.  இரவு 8.30 மணிக்கு உலகமே எதிர்பார்த்து இருந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் முதல் ஆட்டம் துவங்கியது. அதில் ரஷ்யா-சவூதி அரேபியா நாடுகள் பல பரீட்சை நடத்தின.    விறுவிறுவென துவங்கிய ஆட்டத்தின் முதல் பாதியில் ரஷ்யா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. ஆட்டத்தின் முதல் 12வது நிமிடத்தில் ஒரு கோலை அடித்தார்  காஷின்ஸ்கி, பின்னர் 2வது கோலை அடித்தார் அந்த அணியின் டென்னிஸ்.   பரபரப்புடன் துவங்கிய இரண்டாவது பாதியிலும் ரஷ்யாவே ஆதிக்கம் செலுத்தியது. 71ம் நிமிடத்தில் ஒரு கோலும், இறுதி நேரத்தின் போது தலா ஒரு கோலை அடித்தனர் காஷின்ஸ்கியும் டென்னிசும். இறுதிவரை போராடிய சவூதி அரேபியாவில் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.  இதனால் ஆட்டத்தை ரஷ்யா கை பற்றி 3 புள்ளிகளையும் தட்டிச்சென்றது. மேலும் உலகக்கோப்பை போட்டியை  நடத்தும் நாடுகள் துவக்க ஆட்டத்தில் பங்கேற்று ஆடும் முதல் ஆட்டம் வெற்றி பெறுவது 7வது முறை. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சவூதி அரேபியா இளவரசர் முகமத் பின் சல்மான், பிபா தலைவர் ஜியான்னி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
More News >>