தமிழக இன்ஜினியர்கள் 1.60 லட்சம் பேருக்கு வேலை இல்லை!
”தமிழக இன்ஜினியர்கள் 1.60 லட்சம் பேர் வேலை இல்லாமல் உள்ளனர்” மாநில அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மேலும் அமைச்சர் செங்கோட்டையன் அளித்துள்ள பேட்டியில், “தமிழகத்தில் பொறியியல் படிப்பு முடித்து 1.60 லட்சம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். இதைத் தவிர்க்க இனி வரும் காலங்களில் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு பட்டய கணக்காளர் படிப்புக்கு பயிற்சி அளிக்கப்படும். தற்போது 12-ம் வகுப்பு முடித்தாலே வேலை பெறும் வகையில் அரசு பயிற்சி வழங்கி வருகிறது” எனக் கூறினார்.
கூடுதலாக இந்தப் புதிய கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களின் மேம்பாடு தரம் குறித்து கூறுகையில், “பள்ளி மாணவர்கள் புத்தகங்களை படிக்க நடமாடும் நூலகங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதிதாக இந்த கல்வி ஆண்டு முதல் மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் 15 பாடங்கள் கொண்டுவரப்பட உள்ளன. மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி அளிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என அறிவித்துள்ளார்.