ஷாருக்குடன் சல்மான்.. ஜீரோ பட டீசரை வெளியிட்ட தனுஷ்
இந்தி சூப்பர் ஸ்டார், பாலிவுட் பாதுஷா, எஸ்.ஆர்.கே. என பல பெயர்களை கொண்ட ஷாருக்கான் தற்போது நடித்து முடித்து இருக்கும் படம் ஜீரோ. பிரபல இயக்குனர் ஏ.எல்.ராய் இயக்கிவரும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது அந்த படத்தின் டீஸர் இன்று வெளியானது.
படத்திற்கு ஏற்றார் போல் தன்னை வருத்தி கொண்டு ஒவ்வொறு படத்திற்கும் தனது உடல் அமைப்பை மாற்றி சிறந்த நடிப்பை வெளி காட்டுவார் ஷாருக். அப்படி இந்த படத்திலும் ஒரு சிறப்பு உண்டு. அது என்ன என்றால், படத்தில் 'அபூர்வசகோதரர்கள்' அப்பு கமல் போன்ற ஒரு தோற்றத்தில்.. அதாவது உயரம் வளர்ச்சியடையாத குள்ள மனிதராக நடித்துள்ளார் பாலிவுட் பாதுஷா. ஏற்கனவே இந்த கதாபாத்திரத்தின் சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
ஜீரோ படத்தில் கூடுதல் சிறப்பாக கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார் நடிகர் சல்மான் கான். இந்த செய்தியை கேட்டு இருவரது ரசிகர்களும் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். சுமார் 10 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைந்து நடித்துள்ளனர். ஜீரோ படம் டிசம்பர் 21ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில் படத்தின் டீசரை இன்று தமிழகத்து வேங்கைய மகனின் மருமகனான தனுஷ் வெளியிட்டுள்ளார். டீசரில் ஷாருக்குடன் சல்மான் கானும் வரும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனால் உற்சாகத்தில் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.