இறுதி சுற்று ஹீரோவுக்கு இது இரண்டாவது சுற்று: ஷ்ரத்தாவுடன் மீண்டும் ஜோடி
By Isaivaani
விக்ரம் வேதா படத்தில் இணைந்து நடித்து படத்திற்கு வெற்றியை பெற்று தந்தவர்கள் விஜய் சேதுபதி-மாதவன் மட்டுமல்ல. மாதவன்-ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஜோடியும் தான். இருவரின் கெமிஸ்ட்ரியும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இறுதி சுற்று படத்திற்கு பின் மாதவனுக்கு இரண்டாவது சுற்று வாய்ப்புகள் அமோகமாக வந்த வண்ணம் உள்ளன. தமிழ், ஹிந்தி என படங்களுக்கு கால்ஷீட் கொடுப்பதில் பிசியாகியுள்ளார். ஹிந்தியில் ஷாரூக்குடன் நடித்து வருகிறார் மாதவன்.
இந்நிலையில் தமிழில் இவர் ஒரு அறிமுக இருக்குனருடன் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அறிமுக இயக்குனர் திலீப் குமார் இயக்கும் புதிய படம் "மாறா" படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். ஜூன் 18ந் தேதி படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில், மாதவனுக்கு ஜோடி யார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஏற்கனவே விக்ரம் வேதா படத்தில் ஜோடி சேர்ந்து அசத்திய ஷ்ரத்தா ஸ்ரீநாத் இந்த படத்திலும் மாதவனுக்கு ஜோடியாகிறார். மீண்டும் சாக்லேட் ஹீரோ மாதவனுடன் ஜோடி சேர்ந்து நடிக்க போகிறேன் என்பதை நினைத்து பார்த்தால் சந்தோஷமாக இருக்கிறது என்று பதில் அளித்துள்ளார் ஷ்ரத்தா.