திரிஷாவுக்கு எதிரான மேல்முறையீடு மனு- நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

நடிகை திரிஷாவுக்கு விதிக்கப்பட்ட 1. 16 கோடி ரூபாய் அபராதம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து வருமான வரித்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2010-2011ஆம் நிதியாண்டில் ரூ.3.51 கோடி வருமானத்தை மறைத்ததாகக் கூறி, நடிகை திரிஷாவுக்கு ரூ.1.16 கோடி அபராதம் விதித்தது, வருமான வரித்துறை துணை ஆணையர் கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்தார்.

2010-11ல் படங்களுக்கு வாங்கிய அட்வான்ஸ் தொகையை, 2012-13ல் தாக்கல் செய்த திருத்தப்பட்ட வருமான வரி கானக்கில் காட்டியதாகவும் அதை கருத்தில் கொள்ளாமல் தனக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை ஆணையரிடம் திரிஷா தரப்பில் முறையிடப்பட்டது.

வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், திரிஷாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, வருமானவரித்றை முதன்மை ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி தலைமையிலான அமர்வு, வருமானத்தை மறைக்காத திரிஷாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்து தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவு சரிதான் என தீர்ப்பளித்தது.

More News >>