ஊட்டியில் அரசு பேருந்து விபத்து!- பலி எண்ணிக்கை 9ஆக உயர்வு

நீலகிரி மாவட்டத்தின் ஊட்டியில் அரசு பஸ் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து கோர விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்தனர். ஊட்டியில் இருக்கும் மந்தடா பகுதியில் அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, பேருந்தின் ஓட்டுநர் காட் சாலையில் இருக்கும் பள்ளத்தைத் தவிர்க்க பேருந்தை விளிம்பு நோக்கி திருப்பியுள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக 500 அடி பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்தது. இதனால் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 28 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்ததை அடுத்து சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறையினரும் போலீஸாரும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

காயமடைந்தவர்களில் 19 பேர் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மீதம் உள்ளவர்களுக்கு அருகில் இருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில். இறந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

ஊட்டியிலிருந்து குன்னூருக்கு பேருந்து செல்லும் போது இந்த விபத்து நடந்துள்ளது. கடந்த சில வாரங்களாக நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த கனமழை விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

More News >>