ஃபெராரி 250ஜிடிஎஸ்: ஓர் அறிமுகம்
உலகின் மிக விலை உயர்ந்த கார் என புதிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது ஃபெராரி 250ஜிடிஎஸ். இதனது விலை 70 மில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது, 469 கோடி ரூபாய் ஆகும்.
இதற்கு முன்னர் கடந்த 1963-ம் ஆண்டு ஃபெராரி 250 ஜிடிஓ 4153 ஜிடி என்ற சேஸிஸ் நம்பர் உடன் விற்பனைக்கு வந்தது. அந்தக் கார் தான் மிக உயர்ந்த விலைக் காராக முதன் முறையாக சாதனை படைத்தது. அந்தக் காரும் 70 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அதாவது 460 கோடி ரூபாய்க்குவிற்பனை செய்யப்பட்டது.
அன்றைய காலகட்டத்தில் அமெரிக்க ஃபெராரியின் ஆளுநர் டேவிட் மெக்நெய்லி என்பவரிடம் விற்பனை செய்யப்பட்டது. இவர் வெதர்டெக் என்ற கால் மிதியடிகள் தயாரிக்கும் நிறுவனத்தின் சிஇஓ ஆகப் பெறுப்பு வகித்து வந்தார். மிகவும் பாதுகாப்பான காராகவும் இக்கார் கருதப்படுகிறது.
இன்றைய ஃபெராரியின் அடையாளமாகக் கருதப்படும் சிவப்பு நிற ஃபெராரி காரை விட அதிக பிரசித்தி பெற்றதாக இருந்த ஃபெராரியின் அடையாளம், ஃபெராரி 250 ஜிடிஓ. சில்வர் நிற இந்த ஃபெராரி வகை கார் ரேச் கார் ஆகவும் பிரபலமாகியிருந்தது.