ராஜ்தாக்கரே பிறந்தநாளை முன்னிட்டு பெட்ரோல் விலையில் ரூ.9 குறைப்பு
மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரேவின் 50 வது பிறந்தநாளை முன்னிட்டு பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.9 வரை குறைத்து வழங்கி உள்ளனர்.
மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியின் தலைவரான ராஜ் தாக்கரேவின் 50வது பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடினர்.இதை முன்னிட்டு, குறிப்பிட்ட சில பெட்ரோல் பங்குகளில் ஒரு லிட்டர் பெட்ரோ விலையில் ரூ.4ல் இருந்து ரூ.9 வரையில் குறைத்து சலுகை வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலையில், இதுபோன்ற சலுகை வழங்கியதால், வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசையில் நின்று மகிழ்ச்சியுடன் பெட்ரோல் நிரப்பி சென்றனர். இன்று ஒரு நாள் மட்டுமே இந்த சலுகை என்பதால், நேரமானாலும் பரவாயில்லை என்று பெட்ரோல் பங்குகளில் வண்டிகளுடன் காத்துக் கொண்டிருக்கன்றனர்.