நாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

தமிழகம் உள்பட நாடு முழுவதும் நேற்று மாலை பிறை தெரிந்ததை அடுத்து, இன்று ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் நேற்று முன்தினம் ரம்ஜான் பண்டிகை என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்தைய நாளை இரவு பிறை தெரியாததால், ரம்ஜான் பண்டிகை நேற்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனால், நேற்று பள்ளி மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து, நேற்று மாலை பிறை தெரிந்தது. இதனால், இன்று தமிழகம் உள்பட நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மசூதிகளில் சிறப்பு தொழுகையுடன் இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழத்துக்கைள பரிமாறிக் கொண்டனர்.

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல், டெல்லியில் புகழ்பெற்ற ஜூம்மா மசூதியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை செய்தனர்.

மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் ராடாபோராவில் உள்ள மசூதியிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

More News >>