விஜய் மல்லையாவிற்கு மேலும் ரூ.1 கோடி அபராதம்

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா தேசிய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார். இங்கிலாந்து கோர்ட்டில் இந்திய அரசு சார்பில் வழுக்கு ஒன்று தொடர்ந்து உள்ளது. மல்லையாவை இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள கடன் தீர்ப்பாயம் மல்லையாவிடம் கடனை வசூலிக்க இந்திய தேசிய வங்கிகளுக்கு அதிகாரம் அளித்துள்ளது. மேலும் இந்திய கோர்ட் உலகளாவிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் மல்லையாவின் உலகளாவிய சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்துள்ளது.    அதனை எதிர்த்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் முறையிட்டார். அதில் தனது சொத்துக்களை முடக்க இந்தியா நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று முறையிட்டார். ஆனால் இந்திய நீதிமன்றம் பிறப்பித்த அந்த உத்தரவுக்கு தடைவிதிக்க கோரி மல்லையா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தும், இந்திய நீதிமன்றம் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்றும் இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், மல்லையாவிடம் இருந்து கடனை வசூலிக்க இந்திய வங்கிகளுக்கு ஆதரவான உத்தரவை அளிக்கப்பட்டது.   அதே வேளையில் கடன் வசூலிப்பு தீர்ப்பாயத்தின் தீர்ப்பையும், உலகளாவிய உத்தரவையும் இங்கிலாந்தில் பதிவு செய்ய ஆன செலவு மொத்தம் 1 கோடியே 80 லட்சம் ரூபாயை இந்திய வங்கிகளுக்கு மல்லையா வழங்க வேண்டும் என்று இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
More News >>