விநாயகர் சதுர்த்தி அன்று தனுஷுடன் மோதும் சீமராஜா..

சிவகார்த்திகேயன் பொன்ராம் கூட்டணியில் உருவாகிவரும் அடுத்த திரைப்படம் சீமராஜா. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் வரிசையில், தற்போது விறுவிறுப்பாக சீமராஜா படப்பிடிப்பு, தென்காசி குற்றாலம் பகுதிகளில் வேகமாக நடைபெற்று வருகிறது.  சமந்தா, சிம்ரன் என நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் புதிய தோற்றத்தில் நடித்து வருகிறார். படத்தில் ஒரு பிளாஷ் பாக் காட்சி இருப்பதாகவும், அதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. அதற்காக தனது தோற்றத்தில் வித்யாசம் காட்டுவதற்காக தாடி வைத்துள்ளார் சிவா.   டீஸர், ட்ரைலர் என அனைத்து விதமான விளம்பர வேலைகளும் மும்முரமாக தயாராகி வரும் நிலையில் படத்தை விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 13ம் தேதி அன்று வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.    இதே நாளில் தான் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் வட சென்னை படமும் வெளியாக உள்ளது. தனுஷின் 3 படத்தில் சிவா நடித்திருக்கிறார். எதிர்நீச்சல் படத்தில் தனுஷ் ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார். இப்படி சிவகார்த்திகேயனின் வளர்ச்சிக்கு தனுஷும் ஒரு படிக்கட்டாக இருந்துள்ளார். தற்போது சிவகார்த்திகேயன் படம் தனுஷின் படத்திற்கு இணையாக வெளியாவது ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
More News >>