சுற்றுச்சூழல் பாதுகாப்பு

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

மனிதனின் நன்மைக்காகவும் பாதுகாக்கும் ஒரு பழக்கமாகும். மக்கள்தொகையினாலும் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் சுற்று சூழல் சில நேரங்களில் நிரந்தரமாக பாதிக்கப்படுகிறது. இதை உணர்ந்த அரசாங்கங்கள் சுற்றுச்சூழல் சீரழிவிற்கு காரணமான செயல்களைக் கட்டுப்படுத்தி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளன.

1960 களில் இருந்து, சுற்றுச்சூழல் இயக்கங்களின் செயல்பாடுகள் பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. மனித நடவடிக்கைகளினால் சுற்றுச்சூழலில் தாக்கம் எந்த அளவிற்கு ஏற்படுகின்றது என்பது தெளிவாக தெரியவில்லை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் சில சமயங்களில் கடுமையாக விமர்சிக்கபடுகின்றன.

கல்வி நிறுவனங்கள் இப்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு முறைகள், சுற்றுச்சூழல்கல்வி, சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் போன்ற படிப்புகளை வழங்குகின்றன.

சுற்றுச்சூழல் சட்டங்கள், நெறிமுறைகள் மற்றும் கல்வி மூன்றும் பின்னிப்பிணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு வழிவகுக்கின்றன. இந்த காரணிகளின் ஒவ்வொன்றும், தேசிய சுற்றுச்சூழல் முடிவுகள் மற்றும் தனிப்பட்ட சுற்றுச்சூழல் நடத்தைகளையும் பாதிக்கின்றன.

More News >>