நீதிபதி வீட்டில் தஞ்சம் அடைந்த புதுமண தம்பதி

திருவண்ணாமலையில், சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதி, பாதுகாப்பு வழங்கக் கோரி மாவட்ட நீதிபதியின் வீட்டில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். போளூரைச் சேர்ந்தவர் சங்கவி. இவர்கள் இருவரும் கடந்த ஆறு மாதங்களாக காதலித்து வந்தனர். பெற்றோர் சம்மதம் தெரிவிக்காததால் இருவரும் மேல்மருவத்தூரில் திருமணம் செய்து கொண்டனர்.

இதையடுத்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கூறி இருவரும், திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி மகிழேந்தியின் வீட்டில் தஞ்சம் புகுந்தனர்.

இதையறிந்த சங்கவியின் உறவினர்கள், நீதிபதியின் வீட்டை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் தம்பதியை, போளூர் போலீசார் அழைத்துச் சென்றனர்.

More News >>