வரி ஏய்ப்பு செய்த ரொனால்டோ: அபராதத்துடன் சிறைத் தண்டனை விதிப்பு!

போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டனும், உலக புகழ்பெற்ற வீரருமான கிறிஸ்டியானோ ரொடால்டோ, வரி ஏய்ப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்பட்டது. ஸ்பெயின் நாட்டின் கால்பந்து அணி க்ளப்களில் விளையாடும் பல சர்வதேச கால்பந்து வீரர்கள் மீது சமீபத்தில் வரி ஏய்ப்பு புகார்கள் எழுந்தன. இதை விசாரித்து வருகிறது அந்நாட்டு நீதிமன்றம்.

கடந்த ஆண்டு அர்ஜென்டினாவின் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, இதைப் போன்ற வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் சிக்கினார். அவருக்கு 21 மாத காலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், ஸ்பெயின் நாட்டில் இந்த தண்டனைக்குப் பதில் அபராதம் கட்டலாம் என்று சட்டம் இருப்பதால் மெஸ்ஸி, அபராதம் கட்டி தப்பித்தார்.

இந்நிலையில் ரொனால்டோ மீதும் கடந்த ஆண்டு, 14.7 மில்லியன் யூரோக்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார் கூறப்பட்டது. இதை ரொனால்டோ தரப்பு மறுத்து வந்தாலும், தொடர்ந்து இது குறித்து விசாரணை நடந்து வந்தது.

இந்நிலையில், ரொனால்டோ மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இது ஒருபுறமிருக்க, நேற்று போர்ச்சுகலுக்கும் ஸ்பெயின் நாட்டுக்கும் இடையில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்றது.

இதில் ரொனால்டோ ஹாட்-ட்ரிக் கோல் அடித்தார். ஆட்ட நேர இறுதியில் இரு அணிகளும் தலா 3 கோல்கள் பெற்றிருந்த நிலையில், போட்டி டிராவில் முடிந்தது. இந்தப் போட்டி நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் தான் ரொனால்டவின் தண்டனை விபரம் பற்றி தகவல் வெளியே வந்தது.

2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை தவிர்க்கும் விதத்தில் ஸ்பெயின் நாட்டு அரசுடன் ஒரு ஒப்பந்தத்திற்கு ரொனால்டோ சம்மதித்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின்படி ரொனால்டோ, 18.8 மில்லியன் யூரோக்களை ரொனால்டோ அபராதத் தொகையாக கட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News >>