பைலோட்டி ஃபெராரி: கார் ரேஸின் ஜாம்பவான்!
ஃபெராரி தனது மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரசிகர்களுக்காக பிரத்யேகமாக ஃபெராரி 488 பிஸ்தா வகை கார்களின் கூடுதல் சிறப்பு அறிமுகமாக பைலோட்டி ஃபெராரி என்ற ரேஸ் வகை கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஃபெராரி ரக கார்களில் ரேஸ் செல்லும் தனது வாடிக்கையாளர்களைக் கவுரவப்படுத்தும் விதமாக சர்க்யூட் டே லா சார்தே மைதானத்தில் நடைபெற இருக்கும் லே மான்ஸ் ரேஸ் போட்டியின் துவக்க விழாவிற்கு முந்தைய நாள் மாலையில் இந்த பைலோட்டி ஃபெராரி களத்தில் நேரடியாக அறிமுகம் ஆக உள்ளது.
ஃபெராரியின் புதுத் தோற்றம் வெளிப்புறத்தில் இத்தாலியக் கொடியை ஏந்தியுள்ளது. மேலும் பல ரேஸ் சாம்பியன்ஷிப் பட்டங்களைக் கவுரவப்படுத்தும் விதமாக 488 ஜிடிஇ ரகத்தை நினைவுப்படுத்தும் வகையிலும் வெளித்தோற்றம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
3.9 லிட்டர் டர்போ சார்ஜ் வகை என்ஜின் அமைப்புக் கொண்ட பைலோட்டி ஃபெராரி 488 பிஸ்தா கார் தான் உலகின் மிகச் சிறந்த என்ஜின் என்ற பெருமையைத் தொடர்ந்தாற் போல் மூன்றாம் ஆண்டாக 2018-ம் ஆண்டின் சர்வதேச என்ஜின் விருதுகள் விழாவில் பெற்றது குறிப்பிடத்தக்கது ஆகும்.