மெகாசிரெல்லா- உலகின் மிகப் பழமையான பல்லி கண்டுபிடிப்பு
250 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பெர்மியன் காலத்தில் தோன்றிய உயிரினங்கள் தான் ஊர்வன எனக் கூறப்படுகிறது.
தொல் உயிரியளாலர் ஆய்வில், மெகாசிரெல்லா என்றதொரு பல்லி வகை உயிரனம் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 240 மில்லியன் ஆண்டுகள் பழமையான தொல் படிவத்திலிருந்து இந்த மெகாசிரெல்லா பல்லி தான் பல்லிகளுக்கு எல்லாம் மூத்த பல்லி தாய் பல்லி எனக் கூறப்படுகிறது. இப்பல்லி மீதான ஆராய்ச்சி தான் ஊர்வன இனம் எப்படி சிறியதலிருந்து பெரியவையாக உருமாறின என்பது குறித்த கூடுதல் தகவல்கள் கிடைக்கின்றன. அண்டார்டிகா கண்டனத்தைத் தவிர இதர கண்டங்களில் இவற்றின் வள்ர்ச்சிப் படிமம் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்த மற்றுமொரு தொல் உயிரியலாளர் இத்தாலியின் ட்ரெண்டோவில் உள்ள மியூஸ் பல்கலைக்கழகத்துக்கான ஒரு வீடியோ பதிவில், “இந்தக் கண்டுபிடிப்பு சிறந்ததொரு உதாரணமாக உள்ளது. பாம்பு மற்றும் பல்லி இன வகைகளின் தோற்றப் பெருக்கத்தைக் கண்டறிய உதவி புரிந்துள்ளது” எனக் கூறியுள்ளார்.
இதுதொடர்பான கூடுதல் ஆராய்ச்சியை தற்போது டியாகோ சைமோஸ் மேற்கொண்டு வருகிறார். தன்னுடைய முனைவர் ஆராய்ச்சி படிப்பையே பல்லி மற்றும் பாம்பு இனங்களின் வாழ்ந்த மற்றும் வாழும் காலங்களை ஆராய்ச்சி செய்து வருகிறார்.