ஸ்டெர்லைட் ஆலையில் அமிலக் கசிவு: சரி செய்யப்படும் என ஆட்சியர் உறுதி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் அமிலக் கசிவு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்க்டியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் அப்பாவி மக்கள் 13 பேரை சுட்டுக் கொலை செய்த பின்னர் தமிழக அரசு இறந்தவர்களுக்கு நஷ்ட ஈடு தொகையும், ஒரு வாரத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது.

இந்நிலையில் இன்று மதியம் ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள அமிலக் கிடங்கில் கசிவு ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், அப்படி ஏதும் இல்லை என்றும் விரைவில் ஆய்வு நடத்துவதாகவும் தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவித்தார்.

இதன் அடிப்படையில் நடந்த ஆய்வில் ஸ்டெர்லை ஆலையில் அமிலக் கசிவு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து இப்பாதிப்பு நாளை சரி செய்யப்பட்டு விடும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

More News >>