பிரிந்தவர்கள் சேர வேண்டும்- செல்லூர் ராஜு உருக்கம்!
இன்றைய சட்டசபை கூட்டத்துக்குப் பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜு பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், “அதிமுகவில் இருந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பது பற்றி ஈபிஎஸ்-ஓபிஎஸ் முடிவு செய்வர். ஆனால், பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவுக்கு வர வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம்.
நீட் விவகாரத்தைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் நீட் தேர்வை அரசு ஆதரிக்கவில்லை. எதிர்த்துதான் போராடி வருகிறது. ஆனால், திமுக செய்யும் போராட்டத்தால் மக்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்.
சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு எழுகிறது. இது நல்லதிட்டம் என எதிர்க்கட்சித் தலைவரே வரவேற்றுள்ளார். திட்டத்தை வெறும் அரசியலுக்காக சிலர் எதிர்க்கின்றனர்” என பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழக விவகாரங்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தார்.