தந்தையர் தினம்: தமிழில் தந்தைக்கு வாழ்த்துத் தெரிவித்த ஹர்பஜன்!
இன்று தந்தையர் தினம் கொண்டாட்டத்தை முன்னிட்டு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது தந்தைக்கு தமிழில் வாழ்த்துச் செய்தி தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் நட்சத்திரமான ஹர்பஜன் சிங் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பாக விளையாடத் தொடங்கியதிலிருந்தே தமிழ்ப் பற்றை சற்றுத் தூகலாகவே வெளிப்படுத்தி வருகிறார்.
ஐபிஎல் போட்டி நடந்து கொண்டிருக்கும் போதுதான் தமிழில் ட்விட்டர், ஃபேஸ்புக் பதிவு என ரசிகர்களைக் கவரும் வண்ணம் பதிவிட்டு வந்தார் என்றால் தற்போது ஐபிஎல் முடிந்த பின்னரும் தமிழில் செய்தி வெளியிட்டு வருகிறார்.
இன்று தந்தையர் தினத்துக்கான தன் வாழ்த்துப் பதிவில் ஹர்பஜன் சிங், “தெய்வங்கள் எல்லாம் தோற்று தான் போகும் அப்பா உன் அன்பிற்கு முன்னே. ஈடு இணை இல்லா அற்புதம் நீ!! வாழ்க்கையின் அர்த்தம் புரியவைத்த தீர்க்கதரிசி நீ!! சுயநலம் என்ற வார்த்தை தெரியாத வள்ளல் நீ!! உலகின் அனைத்து தந்தையர்க்கும் இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள் நான் உட்பட" எனக் குறிப்பிட்டுள்ளார்.