அரசியலுக்கு வருவேன்!- பார்த்திபன் அறிவிப்பு
நடிகர் பார்த்திபன் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் பார்த்திபன், “நான் 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு குறித்து எல்லாம் கருத்து தெரிவிக்கும் அளவுக்கு வளரவில்லை. அதற்காகத் தான் கொஞ்சம் கால அவகாசம் எடுத்துக் கொண்டுள்ளேன்.
விரைவில் எனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பு வெளியாகும். சமீபத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து கூட அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால், அந்த அறிவிப்புக் கூட பிளாஸ்டிக் கவரில் தான் வைத்துக் கொடுத்திருப்பார்கள் என நினைக்கிறேன்.
பிளாஸ்டிக்குக்கு மாற்று வழி என்பதை முதலில் இந்த அரசு யோசித்து தீர்மானிக்க வேண்டும். மற்றொரு முக்கிய விவகாரம் குறித்தும் அரசு நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும். எஸ்.வி.சேகரை இன்னும் கைது செய்யாமல் இருப்பது ஏன்? அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் பேசியுள்ளார்.