டிராவில் முடிந்த பிரேசில்-ஸ்விட்சர்லாந்து இடையிலான உலகக்கோப்பை கால்பந்து போட்டி
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்று பிரேசில் மற்றும் ஸ்விட்சர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற லீக் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், நேற்று மூன்று போட்டிகள் நடைபெற்றன. முதலில், செர்பியா மற்றும் கோஸ்டா ரிகா அணிகள் மோதின. இதில், செர்பியா அணி, கோஸ்டா ரிகா அணியை வீழ்த்தியது.
இதேபோல், இரண்டாவதாக களமிறங்கிய, மெக்சிகோ மற்றும் ஜெர்மனி அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் மெக்சிகோ அணி வென்றது.தொடர்ந்து, மூன்றாவது லீக் போட்டியில் ஈ பிரிவில் இடம்பிடித்துள்ள பிரேசில் மற்றும் ஸ்விட்சர்லாந்து அணிகளுக்கிடையே போட்டி நடைபெற்றன. இப்போட்டியின் 20வது நிமிடத்தில் பிரேசில் அணியின் பிலிப்பே கவுடின்ஹோ கோல் அடித்தார்.
இதனால், பிரேசில் அணி 1-0 என முன்னிலை பெற்றது. ஆனால், ஸ்விட்சர்லாந்து அணி முதல் பாதி நேர ஆட்டத்தில் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. தொடர்ந்து, இரண்டாவது பாதி நேர போட்டியில் 50வது நிமிடத்தில் ஸ்விட்சர்லாந்து அணியின் ஸ்டீவன் ஜூபர் கோல் அடித்தார். இதனால், ஆட்டம் 1-1 என சமமானது. அதன்பின், இரு அணியினரும் கோல் போடும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர். ஆனால், அதன்பின்னர் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால், இப்போட்டியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடித்தனர்.