சீறிய அனுஷ்கா சர்மா... படம்பிடித்த விராட்... கொந்தளித்த நபர்!
சாலையில் குப்பை வீசுவதை கண்டிக்கும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மாவின் வீடியோவும், அந்த நபரின் எதிர் பதிவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மும்பையில் விலை உயர்ந்த காரில் சென்ற ஒருவர், கண்ணாடியை திறந்து குப்பையை வெளியே வீசியுள்ளார். அவ்வழியாக காரில் சென்ற கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா, அந்த நபரை கண்டித்துள்ளார். குப்பையை கீழே போடாதீர்கள், தொட்டியில் போடுங்கள் எனவும் அனுஷ்கா சர்மா அறிவுறுத்தியுள்ளார்.
இதனை வீடியோ எடுத்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அத்துடன், இது போன்றவர்களை பார்த்தால் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் என்று கருத்து பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு வெளியானதும் அனுஷ்காவிடம் திட்டு வாங்கிய நபர் தற்போது எதிர்வினை ஆற்றியுள்ளார். அர்ஹான் சிங் என்னும் அந்த நபர் இந்த சம்பவம் தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
“மன்னிப்பு கேட்ட பிறகும், வழிப்போக்கர்களைப்போல் அனுஷ்கா சர்மா என்னை அநாகரிகமாக திட்டியதை அருகில் இருந்து படம் பிடித்த விராட் கோலி செயல் படுகுப்பையாக இருக்கிறது” என பதிவிட்டுள்ளார்.