பிரதமர் மோடியை நோக்கி.. இளைஞரின் 1350 கி.மீ., நடைபயணம்

பிரதமர் மோடி அறிவித்த வாக்குறுதிகளை அவருக்கு நினைவுக்கூறும் வகையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் மோடியை சந்திக்க 1350 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசா மாநிலம் ரூர்கேலா பகுதியில் இஸ்பேட் என்ற பொது மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு, கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் மோடி வந்திருந்தார். அப்போது, மருத்துவமனையில் சிறப்பான மருத்துவ வசதி செய்து கொடுக்கப்படும் என்றும், மருத்துவமனையின் தரம் உயர்த்தப்படும் என்றும் வாக்குறுதிக் கொடுத்துள்ளார். ஆனால், மூன்று ஆண்டுகள் கடந்தும் இதுவரை வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்று தெரிகிறது.

இதனால், ஏமாற்றமடைந்த அப்பகுதியை சேர்ந்த முக்திகந்த பிஸ்வால் (30) என்ற இளைஞர், பிரதமர் மோடியை சந்தித்து வாக்குறுதியை நிறைவேற்ற நினைவுக்கூற முடிவு செய்தார். அதன்படி, தனது வீட்டில் இருந்து தனக்கு பயன்படும் பொருட்களை ஒரு பையில் எடுத்துக் கொண்டு நடைபயணமாக கிளம்பினார்.

ஆனால், 1350 கி.மீ கடந்து சென்ற நிலையில், முக்திகந்த பிஸ்வாலுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதன் பிறகு, அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைக்கு பிறகு சுய நினைவுக்கு வந்த பிஸ்வால் பிரதமர் மோடியை சந்தித்து வாக்குறுதியை நினைவூட்டாமல் சொந்த ஊருக்கு திரும்ப மாட்டேன் என சவால்விட்டுள்ளார்.

More News >>